Home இலங்கை அரசியல் வதை முகாம்களை நடத்தியவர்களை கைது செய்வோம்: சூளுரைக்கும் பிமல்

வதை முகாம்களை நடத்தியவர்களை கைது செய்வோம்: சூளுரைக்கும் பிமல்

0

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர், ரோஹினி குமாரி விஜேரத்னவை சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) கொலைகாரனின் மகள் என்று அழைத்ததையடுத்து சபை நடவடிக்கையில் சலசலப்பு ஏற்பட்டது.

தலதா மாளிகை மீது கடந்த 1989 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) நடத்திய தாக்குதல் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன கேள்வி எழுப்பினார். 

இதன்போது, சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake), நாடாளுமன்ற உறுப்பினரை ஒரு கொலைகாரனின் மகள் என்று அழைத்தார்.

கொலைகாரனின் மகள்

தொடர்ந்து ஆளுங்கட்சியின் சபை முதல்வர் எழுந்து நின்றபோது சபை பதற்றமடைந்தது.

“மாத்தளையில் உள்ள மனித புதைகுழியில் இருந்து பல எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்போது ஒரு கொலைகாரனின் மகள் எங்கள் முன் நிற்கிறாள்,” என்று அவர் தெரிவித்தார்.

இந்த கட்டத்தில் கோபமடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை நோக்கி, அவர் நிலையியல் கட்டளைகளை மீறியதாகக் குற்றம் சாட்டி கூச்சலிடத் தொடங்கினர்.

1989 ஆம் ஆண்டு ஐ.தே.க அரசாங்கத்தின் அமைச்சர்களும் எம்.பி.க்களும் சித்திரவதை கூடங்களை நடத்தினர் என்பது அனைவரும் அறிந்ததே என்று ஆளுங்கட்சியின் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க கூறினார்.

வதை முகாம்களை நடத்திய அனைவருக்கும் எதிராக நாங்கள் சட்ட நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்வோம்” என்று பிமல் ரத்நாயக்க கூறினார்.

NO COMMENTS

Exit mobile version