Home இலங்கை அரசியல் யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு சொந்த செலவில் நினைவுத்தூபி – சவால் விடும் அங்கஜன்

யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு சொந்த செலவில் நினைவுத்தூபி – சவால் விடும் அங்கஜன்

0

உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு எனது சொந்த செலவில் நினைவுத்தூபி அமைக்கத் தயார் என முன்னாள் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் (Angajan Ramanathan) தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழ் மக்களுக்கு உறவுகளை நினைவுகூருவது கூட சவால் நிறைந்த ஒன்றாகவே காணப்படுகிறது என்றும் அங்கஜன் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், நீண்ட கால உள்நாட்டு யுத்தத்தால் நாட்டு மக்கள் பலரை இழந்துவிட்டோம். 

தமிழ் மக்கள் யுத்த வடுவில்

இனங்களுக்கிடையே புரிந்துணர்வு இன்மை மற்றும் சம உரிமை கிடைக்காமை முதலான காரணங்களால் உள்நாட்டு யுத்தம் உருவாகி அது பலரையும் காவு கொண்டுவிட்டது. இந்த யுத்தத்தால் தமிழ் மக்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

யுத்தம் மௌனித்து 15 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் தமிழ் மக்கள் யுத்த வடுவில் இருந்து மீள முடியாமல் உள்ளனர். அத்தோடு, தமிழ் மக்களுக்கு உறவுகளை நினைவுகூருவது கூட சவால் நிறைந்த ஒன்றாகவே காணப்படுகிறது.

இந்நிலையில், பொதுவான நினைவுத்தூபி ஒன்றை அமைத்து யுத்தத்தில் உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு அரசாங்கம் அனுமதி வழங்கும் பட்சத்தில் எனது சொந்த செலவில் பொதுவான நினைவுத் தூபியை நிறுவி, நாட்டில் நல்லிணக்கத்தை மலரச் செய்வதன் ஊடாக சிறந்த ஆரோக்கியமான எதிர்கால சந்ததியை உருவாக்க முடியும் என்றார். 

Source: https://ibctamil.com/article/war-memorials-and-monuments-1730704971

NO COMMENTS

Exit mobile version