சமூக வலைத்தளங்களில் குழந்தைகளின் புகைப்படங்கள், காணொளிகளை வெளியிடுவதினை தவிர்க்குமாறு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளது.
இவ்வாறு வெளியிடப்படும் புகைப்படங்கள், காணொள் மூலம் குழந்தைகளின் ஆளுமை மற்றும் அடையாளம் மற்றும் குழந்தையின் குடும்ப பின்னணி என்பன அவர்களின் பாதுகாப்பிற்கு பிரச்சினையாக மாறும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே குழந்தைகளின் பாதுகாப்புக்கு தொடர்பில் அளைத்து மக்களும் பொறுப்புடன் செயற்படுமாறு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறு சமூக வலைத்தளங்களில் குழந்தைகளில் புகைப்படங்கள், காணொளிகளை வெளியிடுவதன் மூலம் இணையம் மூலம் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்குள்ளாகும் போக்கு அதிகரித்துள்ளதாகவும் ஆணையம் எச்சரித்துள்ளது.
குழந்தைகளின் பாதுகாப்பு
எனவே குழந்தைகளின் பாதுகாப்புக்கு தொடர்பில் பெற்றோர் விளிப்புடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை,க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை பேஸ்புக் பக்கத்தில் வெளியிடும் போது, அவதானமாக இருக்குமாறு குருநாகல் பிரிவு கல்விப் பணிப்பாளர் விபுலி விதானபத்திரன பெற்றோருக்கு அறிவித்திருந்தார்.
பெறுபேறு தாளில் உள்ள பிள்ளைகளின் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் பெயர் ஆகியவற்றை சமூகவலைத்தளங்களில் இடுவதை தவிர்க்குமாறு , இதன் மூலம், இணையத்தில் உலாவும் ஹேக்கர்கள் அந்தத் தகவலை எளிதாகப் பெற்று பல்வேறு தவறான செயல்களில் ஈடுபட முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.