பொலிஸ் அதிகாரிகள் என கூறி மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்படி பொலிஸ் அதிகாரிகள் என கூறி பல்வேறு பிரதேசங்களில் குறித்த கும்பல் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு பொது மக்களிடமிருந்து பெறுமதியான பொருட்களை அபகரிப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
உடன் தகவல் வழங்குமாறு கோரிக்கை
இவ்வாறான கும்பல் தொடர்பில் தகவல் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகளின் பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் இவ்வாறான கும்பலுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
