Home இலங்கை அரசியல் அநுர அரசின் ஆட்சிக்காலம் : சூளுரைத்துள்ள நாமல்

அநுர அரசின் ஆட்சிக்காலம் : சூளுரைத்துள்ள நாமல்

0

அநுர அரசாங்கத்தை ஐந்து வருடங்கள் ஆட்சி செய்ய அனுமதிக்க விடமாட்டோம் என சிறி லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(namal rajapaksa) சூளுரைத்துள்ளார். 

சிறி லங்கா பொதுஜன பெரமுன(slpp) உள்ளூராட்சி மன்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புவோம்

பலரை சிறையில் அடைத்து மேலும் பொய்களை கூறி அடுத்த 5 வருடங்களை அரசாங்கம் ஆட்சி செய்ய அனுமதிக்கப்போவதில்லை.

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புவோம்.

உகண்டாவில் உள்ள பணம்

அரசாங்கம் தற்போது திருடர்களைப் பிடிப்பதற்கான சட்டமூலமொன்றை நிறைவேற்றியுள்ளதாகவும், உகண்டாவில் தமக்கு இருப்பதாக அவர்கள் கூறிய பணத்தை கொண்டு வரும் வரை அரசாங்கத்தை நாம் பின்தொடர்ந்து செல்வோம் எனவும் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version