Home இலங்கை குற்றம் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு வெளியான எச்சரிக்கை

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு வெளியான எச்சரிக்கை

0

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டறிய நுகர்வோர் விவகார அதிகாரசபையால் முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்புகள் தொடர்ச்சியாக இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மேலதிக குழுக்களை ஈடுபடுத்தி சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என  நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அபராதம் விதிப்பு

இந்தநிலையில், கண்டி மாவட்டத்திற்குட்பட்ட, மாவனெல்ல, பேராதெனிய, கெலிஓயா, கம்பளை, உடபுஸ்ஸலாவ, நாவலப்பிட்டி, உலபனே, தென்னே கும்புர, குண்டசாலை, திகன மற்றும் கடுகன்னாவை உள்ளிட்ட பகுதிகளில் ஐந்து மேலதிக குழுவினர் சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, அதிக விலைக்கு அரிசி விற்ற இரண்டு நிறுவனங்கள் உட்பட 25 வர்த்தகர்கள் மீது அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, கடந்த சில நாட்களிலும் இன்றும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக, அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களால் 6.5 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version