Home இலங்கை சமூகம் கடவுச்சொல்லை பாதுகாக்க தவறும் இலங்கையர்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கடவுச்சொல்லை பாதுகாக்க தவறும் இலங்கையர்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

இலங்கையில் இணையப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் சுமார் 50 வீதமானவர்கள் தமது ‘ஒரு முறை கடவுச்சொல்லை (OTP)’ பாதுகாப்பதன் முக்கியத்துவம் பற்றி அறிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 60 சதவீத மக்கள் ஒரு முறை கடவுச்சொல்லின் (OTP) நோக்கத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்றும் கொடுப்பனவுகள் மற்றும் தீர்வுத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஜும்ஜிம் மொஹொட்டி, தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

 

இணையப் பரிவர்த்தனைகள்

மேலும், இணையப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் பயனர்களில் ஏறத்தாழ 68 சதவீதம் பேர், மோசடி செய்பவர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளுக்குள் உள்நுழைய பயன்படுத்தும் முறைகள் பற்றி அறிந்திருக்கவில்லை.

இணைய பரிவர்த்தனைகளில் முதன்மையான விதி என்னவென்றால், OTPயை யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது.  இணைய பரிவர்த்தனைகளில் கைப்பேசிகளுக்கு OTP வந்தால், அது உங்கள் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க பயன்படுத்தும் முறைமை.

நீங்கள் எந்தவொரு பரிவர்த்தனையும் செய்யாதபோது OTPயைப் பெற்றால், இணையக் குற்றவாளிகள் தங்களது கணக்கிற்குள் நுழைந்துள்ளதாக அர்த்தம்.

 

அரசாங்க நிறுவனம் போல் அடையாளம் 

சமூக ஊடகங்கள் தற்போது பல இணையக் குற்றவாளிகள் தங்களது மோசமான இலக்குகளை அடையப் பயன்படுத்தும் பொதுவான ஆயுதமாக மாறியுள்ளது.

இரகசிய அல்லது தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்தும் வகையில் மக்களை ஏமாற்ற உளவியல் தந்திரங்களைப் இவர்கள் பயன்படுத்துகின்றனர்.

அரசாங்க நிறுவனம் போல் அடையாளம் காட்டிக்கொண்டு பலமுறை உங்களை அழைத்து மோசடியில் ஈடுபடுவார்கள்.

எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் விளிப்புடன் செயற்பட்டு தங்களது வங்கி கணக்குகளை பாதுகாத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

 

NO COMMENTS

Exit mobile version