Home இலங்கை சமூகம் மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : குறைக்கப்படவுள்ள மற்றுமொரு கட்டணம்

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : குறைக்கப்படவுள்ள மற்றுமொரு கட்டணம்

0

நீர் கட்டணத்தை 10 முதல் 30 சதவீதம் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் (National Water Supply Drainage Board) பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டண குறைப்போடு ஒப்பிட்டு, நீர் கட்டணங்களையும் குறைப்பதில் கவனம் செலுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை 

அவர் மேலும் தெரிவிக்கையில், நீர்கட்டணக் குறைப்பு குறித்து ஆராய குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

நீர் கட்டணங்களைக் குறைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அடுத்த சில நாட்களுக்குள் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

பின்னர் தலைவர் அந்த அறிக்கையை விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடம் கையளிப்பார் என்றும், பின் அது தொடர்பான முன்மொழிவுகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.  

NO COMMENTS

Exit mobile version