சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் தண்ணீர் போத்தலின் விலையை குறைக்க முடியும் என மத்திய மாகாண இயற்கை கனிய நீர் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அந்த சங்கத்தின் அழைப்பாளர் சப்புமல் குமார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
விற்பனை விலை
அதன்படி, தற்போது சந்தையில் 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் 500 மில்லி லீட்டர் தண்ணீர் போத்தலை 70 ரூபாவுக்கு வழங்க முடியும் என கூறியுள்ளது.
இதேவேளை நாடு முழுவதிலும் உள்ள மோசடிகாரர்களினால் போத்தலில் அடைக்கப்பட்ட நீர் பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே தண்ணீர் போத்தல்களுக்கு கட்டுப்பாட்டு விலையை உடனடியாக நடைமுறைபடுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் எதிர்வரும் இரண்டு வாரங்களில் பொருட்களின் விலைகள் குறைவடைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.