Home இலங்கை சமூகம் கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

0

கொழும்பின் சில பகுதிகளில் இன்று (04) இரவு 9 மணி முதல் 18 மணிநேர நீர் வெட்டு நடைமுறைபடுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொலன்னாவ நகரசபை, கடுவெல நகரசபை, முல்லேரியா மற்றும் கொட்டிகாவத்தை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்கு 18 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு நடைமுறைபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசர பராமரிப்பு வேலை

இந்த நீர் வெட்டு இன்று (04) இரவு 9 மணி முதல் நாளை (05) பிற்பகல் 3 மணி வரை நடைமுறைபடுத்தப்படவுள்ளது.

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர பராமரிப்பு வேலை காரணமாக இந்த நீர் வெட்டு நடைமுறைபடுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Source: https://tamilwin.com/article/water-cut-in-colombo-1720100572

NO COMMENTS

Exit mobile version