நாட்டில் சில பகுதிகளில் 15 மணிநேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இன்று (15) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் நடைபெறும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீர் விநியோகம் தடை
இந்த நீர் விநியோக தடையானது எதிர்வரும் புதன்கிழமை (17) மாலை 4.00 மணி முதல் வியாழக்கிழமை (18) ஆம் திகதி காலை 07.00 மணி வரை நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மஹர பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலேயே இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.
நீர் விநியோகம் தடைப்படுவதால் நுகர்வோருக்கு ஏற்படும் சிரமத்திற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வருத்தம் வெளியிட்டிருப்பதுடன், தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
