Home இலங்கை சமூகம் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் வெட்டப்பட்ட இரணைமடு குளத்தின் வால்கட்டு!

50 ஆண்டுகளுக்குப் பின்னர் வெட்டப்பட்ட இரணைமடு குளத்தின் வால்கட்டு!

0

இரணைமடு குளத்தின் வால்கட்டு பகுதி வெட்டப்பட்டு நீர் வெளியேற்றப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

அதிக நீர் வரத்து காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே வட்டக்கச்சி, இராமநாதபுரம், மாயவனூர் பிரதேச மக்களை அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

வால்கட்டு வெட்டு

 36 அடி நீர்கொள்ளளவுடைய இரணைமடுக்குளமானது தற்போது 36 அடி நீர் கொள்ளளவை எட்டியுள்ளதால் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் இரணைமடுவின் வால்கட்டு வெட்டப்பட்டது.

மேலும், வெள்ள அனர்த்தம் ஏற்படும் அபாய பிரதேசங்களில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version