Home இலங்கை சமூகம் யாழில் இயேசுவின் சிலையிலிருந்து வடிந்த நீர்!

யாழில் இயேசுவின் சிலையிலிருந்து வடிந்த நீர்!

0

யாழ்ப்பாணத்தில் (Jaffna) காணப்படும் இயேசுவின் சிலை ஒன்றிலிருந்து நீர் கசியும் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவமானது இன்று (28) வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக இயேசுவின் விரல் பகுதியில் இருந்து
நீர் கசிந்துள்ளது.

காலில் இருந்து வடிந்த நீர்

சம்பவம் அறிந்து பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த மக்கள் இயேசுவின் காலில் இருந்து வடிந்தோடிய நீரை எடுத்துச் சென்றனர்.

சகோதர மதத்தினர் மற்றும் இராணுவத்தினர், பொலிஸார், பொது மக்கள் என பலர் இந்த
காட்சியை பார்வையிட்டதுடன் புகைப்படங்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக ஆலய பங்குத்தந்தையால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே மேலதிக
தகவல்களை வெளியிட முடியுமென கப்பலேந்தி மாதா ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version