Home இலங்கை சமூகம் நாட்டில் நீர் வழங்கல் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்

நாட்டில் நீர் வழங்கல் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்

0

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையால் நாடு முழுவதும் 50.9 வீதம் நீரே வழங்கப்படுவதாக சபை அறிவித்துள்ளது.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையால் அதிகமாக நீர் விநியோகிக்கும் பகுதியாக கிழக்கு மாகாணம் அமைந்துள்ளது.

அங்கு 77.9 வீதம் நீர் வழங்கப்படுகிறது. அதற்கு குறைவான விநியோக பகுதியாக வடமேல் மாகாணத்தில் 18.6 வீதம் வழங்கப்படுகிறது.

2016 ஆம் ஆண்டு தகவல் உரிமைகள் சட்டத்தின் படி கோரப்பட்ட தகவல்களிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கிணற்று நீர் பாவனை

ஒவ்வொறு மாவட்டத்திற்கும் சபையால் நீர் வழங்கப்படும் வீதங்கள்;
கிழக்கு மாகாணம் 77.9வீதம் -மேல் மாகாணம் 76.5வீதம் – தென் மாகாணம் 53.6வீதம் – மத்திய மாகாணம் 45.2வீதம் – வடமத்திய மாகாணம் 44.3வீதம் – ஊவா மாகாணம் 39.9வீதம் – சம்பரகமுவ மாகாணம் 27.2வீதம் – வட மாகாணம் 20.2வீதம் – வடமேல் மாகாணம் 18.6 வீதம் ஆகும்.

  

மேலும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையால் சமூக சேவை நிறுவனங்களுக்கு 12.3 வீதம் , உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு 1.0வீதம் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு 0.2வீதம் நீர் வழங்கும் செயற்பாடுகள் நடைபெறுகின்றன.

அத்தோடு பாதுகாப்பான குடிநீரை பெற்றுக் கொள்வதற்காக வேறு நீர் மூலங்களாக கிணற்றில் 31.6வீதம் குழாய் கிணறுகள் 3.2வீதம் ஏனையவை 0.5வீதம் ஆகும்.
வடக்கு மாகாணத்திலே அதிகமாக கிணற்று நீரை பயனபடுத்துவோர் உள்ளனர் அது 54.3வீதமாகும்.

NO COMMENTS

Exit mobile version