Home இலங்கை சமூகம் மக்களுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு: குறைக்கப்பட்டுள்ள நீர்க் கட்டணம்

மக்களுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு: குறைக்கப்பட்டுள்ள நீர்க் கட்டணம்

0

நீர்க் கட்டணத்தைக் குறைத்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்த புதிய நீர் கட்டண திருத்தம் ஓகஸ்ட் 21ஆம் திகதி முதல் நடைமுறையாகும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (National water supply & drainage board) தெரிவித்துள்ளது.

இதன்படி, வீட்டு உபயோகத்திற்கான நீர்க் கட்டணம் 7%, அரச வைத்தியசாலைகளுக்கான நீர்க் கட்டணம் 4.5%, பாடசாலைகள் மற்றும் மதஸ்தலங்களுக்கான நீர்க் கட்டணம் 4.5 சதவீதத்தாலும் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரவை ஒப்புதல்

இதன்படி, மொத்த நீர் கட்டணத்தை 5.94 சதவீதத்தால் குறைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வீட்டு பிரிவில் 0 முதல் 05 அலகுகளுக்கான கட்டணம் 60 ரூபாவில் இருந்து 50 ரூபாவாக ஆக 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

76 முதல் 100 அலகுகளுக்கு இடைப்பட்ட அலகுக்கு அறவிடப்படும் கட்டணம் 270 ரூபாயில் இருந்து 250 ரூபாவாக 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

குடிநீர் கட்டண திருத்தம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் பிரிவின் கீழ் உள்ள அனைத்து பிரிவுகளுக்கும் 60 ரூபாவாக இருந்த கட்டணம் 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய கட்டணம் 55 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அரச வைத்தியசாலைகளுக்கு 100 ரூபாவாக இருந்த ஒரு அலகு நீர் 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய கட்டணம் 95 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த குடிநீர் கட்டண திருத்தத்தின் கீழ் மாதாந்திர சேவைக் கட்டணத்தில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version