Home இலங்கை சமூகம் ஒரிரு நாட்களில் நாட்டை கட்டியெழுப்ப முடியாது : தேசிய மக்கள் சக்தி

ஒரிரு நாட்களில் நாட்டை கட்டியெழுப்ப முடியாது : தேசிய மக்கள் சக்தி

0

ஒன்றிரண்டு நாட்களில் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என தேசிய மக்கள் சக்தி (NPP) தெரிவித்துள்ளது.

தேசிய மக்கள் மக்கள் சக்தியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் சமன்த வித்தியாரட்ன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

76 ஆண்டுகளாக அழிக்கப்பட்ட இந்த நாட்டை ஒரு வருடத்திலேனும் மீட்டெடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோசடிகள் தொடர்பில் விசாரணை 

நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கை அரசாங்கத்தினால் மட்டும் செய்யக்கூடிய விடயமல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியின் பின்னர் மக்களுக்கு நன்றி பாராட்டும் நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

பாரியளவிலான மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 

Source: https://tamilwin.com/article/we-cant-run-the-country-lonely-1731892366

NO COMMENTS

Exit mobile version