Home இலங்கை சமூகம் ஆசிரியர் -மாணவர் உறவு :மேற்கத்தைய சட்டங்கள் இலங்கைக்கு பொருந்தாது : கொதிக்கும் கர்தினால்

ஆசிரியர் -மாணவர் உறவு :மேற்கத்தைய சட்டங்கள் இலங்கைக்கு பொருந்தாது : கொதிக்கும் கர்தினால்

0

 குழந்தைகளை தண்டிப்பது தொடர்பாக முன்மொழியப்பட்ட சட்டமூலத்தை செயல்படுத்தும்போது மேற்கத்திய உலகில் உள்ள சில சட்டங்கள் இலங்கையுடன் முற்றிலும் பொருந்தாது என்று பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

“குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையில் இது ஒரு மோதலை உருவாக்கியுள்ளது, இதனை பெற்றோர்களும் ஆசிரியர்களும் எப்படி உணருவார்கள்? ஆசிரியர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

மாணவனின் தவறான முறைப்பாட்டால் ஆசிரியர் கைது செய்யப்படலாம்

பள்ளிகளில் மாணவர்கள் தவறாக நடந்து கொண்டால், ஆசிரியர் மாணவரை நீளமாக முடி வளர்க்க வேண்டாம் என்றும், அதை வெட்ட வேண்டும் என்றும் கூறலாம். அப்படிச் சொன்னால், மாணவன் காவல்துறையிடம் சென்று என் ஆசிரியர் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகக் கூறலாம். இதைச் சொன்னதற்காக ஆசிரியரைக் கைது செய்யலாம். அது தவறு.

இதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. மேற்கத்திய நாடுகளுக்கு நல்லது எதுவோ அது இலங்கைக்கு ஏற்றதல்ல. நமது இலங்கையில் நாம் மதிக்க வேண்டிய ஒரு கலாசாரம், ஒரு அமைப்பு மற்றும் நெறிமுறைகள் உள்ளன.

கல்வி அதிகாரிகள் தயவுசெய்து இதைச் செய்ய வேண்டாம் 

எனவே, கல்வி அதிகாரிகள் தயவுசெய்து இதைச் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் அவர்கள் வைத்திருக்கும்  வைத்திருக்க வேண்டிய பக்தியையும் அன்பையும் குழந்தைகளில் விதைக்கும் போக்கைத் தடுக்காதீர்கள்.”

நாகோடாவில் உள்ள புனித யோவான் பாப்டிஸ்ட் மகா வித்யாலயத்தின் 150வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற நினைவு திருப்பலியில் பங்கேற்றபோது கர்தினால் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version