Home இலங்கை சமூகம் அர்ச்சுனா வந்தால்தான் எங்களுக்கு முடிவு கிடைக்கும்..! சாடும் மக்கள்

அர்ச்சுனா வந்தால்தான் எங்களுக்கு முடிவு கிடைக்கும்..! சாடும் மக்கள்

0

அர்ச்சுனா வந்தால்தான் எங்களுக்கு முடிவு கிடைக்கும் என கொடிகாமம் சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் (Jaffna) கொடிகாமம் சந்தைக்கு அருகாமையில் உள்ள மரத்தை நேற்றுமுன்தினம் இரவு வந்த சாவகச்சேரி பிரதேச சபையினர் வெட்டியதாக வியாபாரிகள் விசனம் வெளியிட்டுள்ள நிலையில் இந்த கருத்தை முன்வைத்துள்ளனர்.

சந்தையில் சேருகின்ற கழிவுப் பொருட்கள்

தற்போது வெப்பமானது மிகவும் அதிகரித்து வரும் நிலையில், மரங்கள்
நிற்பதன் மூலம்தான் ஓரளவேனும் வெப்பத்தின் தாக்கம் குறைவாக உள்ளது.

இவ்வாறான
சூழ்நிலையில் மக்களின் கருத்தையும் மீறி மரத்தை வெட்டியதாக அவர்கள் குற்றம்
சாட்டியுள்ளனர்.

அத்துடன் சந்தையில் சேருகின்ற கழிவுப் பொருட்களை உரிய முறையில் பிரதேச
சபையினர் அகற்றுவதில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

மக்களுக்கு சரியான முறையில் சேவைகளை வழங்காத உள்ளூராட்சி மன்ற செயலாளர்கள்
மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்
கூறியுள்ளார்.

இந்நிலையில், எமது இந்த பிரச்சினைக்கு அவர் எடுக்கப்போகின்ற நடவடிக்கை என்ன
எனவும்  மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version