Home இலங்கை அரசியல் நாமலை இளவரசர் என்று சொல்ல மாட்டோம் : சஜித் தரப்பு எம்.பி பகிரங்கம்

நாமலை இளவரசர் என்று சொல்ல மாட்டோம் : சஜித் தரப்பு எம்.பி பகிரங்கம்

0

நாமல் ராஜபக்‌சவை (Namal Rajapaksa) இளவரசர் என்று நாங்கள் குறிப்பிடப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் விதாரண (Jagath Withana) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (23) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் வெற்றியா, தோல்வியா என்பதை குறிப்பிட முடியாது. பொது கொள்கையை அடிப்படையாகக் கொண்டு பிரதான எதிர்க்கட்சியான நாங்கள் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

நாமலை கடுமையாக விமர்சிப்பார்

நாமல் ராஜபக்‌சவை நாங்கள் இளவரசர் என்று குறிப்பிடவுமில்லை. அவ்வாறு ஏற்க போவதுமில்லை. அதற்கான அவசியமும் கிடையாது. எதிர்க்கட்சித் தலைவரின் தலைமைத்துவத்தில் நாங்கள் செயற்படுகிறோம்.

ஹரின் பெர்னாண்டோ நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌சவை கடுமையாக விமர்சிப்பார். பின்பு புகழ்வார். அது அவரது முறைமை என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.

பொதுஜன பெரமுனவை அதிகாரத்துக்கு கொண்டு வரும் நோக்கம் எமக்கு கிடையாது. ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமாயின் எதிர்க்கட்சிகள் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைய வேண்டும். இல்லையேல் அரசாங்கம் தான் பலமடையும்” என தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version