Home இலங்கை அரசியல் எங்களுக்கென்று எதுவுமே இல்லை.! மகிந்தவின் இளைய மகன் குமுறல்

எங்களுக்கென்று எதுவுமே இல்லை.! மகிந்தவின் இளைய மகன் குமுறல்

0

அனைவரும் நினைக்கும் வகையில் ராஜபக்சர்கள் குடும்பம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை செய்தித்தாள் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே இவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதில் ராஜபக்சர்கள் செல்வந்தர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,  “எல்லோரும் நினைக்கிறார்கள், எங்களிடம் எல்லாம் இருக்கிறது என்று, ஆனால் உண்மையில், நம்மிடம் எதுவும் இல்லை. எங்களிடம் வீடு, கார் எதுவும் இல்லை.

சிறு வயதிலிருந்தே அரசாங்க சொத்து

நாங்கள் சிறு வயதிலிருந்தே அரசாங்க சொத்தில் வசித்து வருகிறோம். நாங்கள் அரசாங்க வாகனங்களைப் பயன்படுத்துகிறோம்.

இல்லையெனில், ஒரு நண்பரிடம் வாகனத்தை கேட்டு வாங்கிக் கொள்வோம். உண்மையாக அனைவரும் நினைக்கும் வகையில் ராஜபக்சர்கள் குடும்பம் இல்லை.

யாரிடமும் கையேந்தக் கூடாது, தாமே சம்பாதித்து வாழ வேண்டும் என்று என் தந்தை கூறுவார்.

எனவே நான் செய்த ஒரே வேலை கற்பித்தல். அதுவும் பணத்திற்காக அல்ல. எனக்கு வேறு எந்த வருமான ஆதாரமும் இல்லை. நானும் ஒரு முனைவர் பட்டம் பெற வேண்டும்.” என்றார்.

 

NO COMMENTS

Exit mobile version