Home இலங்கை சமூகம் வனப்பகுதிகளில் ஆயுதங்களுடன் நடமாடத் தடை

வனப்பகுதிகளில் ஆயுதங்களுடன் நடமாடத் தடை

0

வனாந்திரங்கள் உள்ள பிரதேசங்களில் ஆயுதங்களுடன் நடமாடுவது தொடர்பில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.

அண்மைக்காலமாக காட்டு யானைகள் உள்ளிட்ட வனஜீவராசிகள் அதிகளவில் கொல்லப்பட்டு வருவதன் காரணமாக வனாந்திரங்களுக்குள் ஆயுதங்களுடன் பிரவேசிப்பதை தடை செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வனஜீவராசிகள் திணைக்களம் 

இது தொடர்பான அறிவித்தல் மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கு மேலதிகமாக வனவிலங்குகளை வேட்டையாடுவோர் மற்றும் வனப் பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் குறித்து தகவல் திரட்டிக் கொள்ள கிராமிய மட்டங்களில் விழிப்புணர்வுக் குழுக்களை அமைக்கவும் வனஜீவராசிகள் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version