Home இலங்கை சமூகம் வவுனியாவில் 120 குளங்கள் நிரம்பி வான் பாய்கின்றன : 3 குளங்கள் உடைப்பு

வவுனியாவில் 120 குளங்கள் நிரம்பி வான் பாய்கின்றன : 3 குளங்கள் உடைப்பு

0

 வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக 120இற்கும்
மேற்ப்பட்ட குளங்கள் முழுக்கொள்ளவை எட்டி வான் பாய்வதுடன், 3 குளங்கள்
உடைப்பெடுத்துள்ளதாக  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில்  தொடர்ந்து சீரற்ற காலநிலை நிலவி வருவதுடன், வவுனியாவிலும் கடந்த சில நாட்களாக கடும் மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது.

இயல்பு வாழ்க்கை 

இதனால்
தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள நீர் நிறைந்து காணப்படுவதுடன், பொது மக்களின்
இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

இந்நிலையில் வவுனியாக்குளம் தனது
முழுக்கொள்ளளவை எட்டியுள்ளதுடன், வான் பாய ஆரம்பித்துள்ளது.

இதேவேளை, மாவட்டத்தின் 120 ற்கும் மேற்பட்ட குளங்கள் தனது முழுக்கொள்ளளவை
எட்டி மேலதிக நீர் வெளியேறிவருவதுடன், அநேகமான குளங்களில் 90 சதவீதமான அளவு
நீர் நிறைந்துள்ளன.

இதுவரை செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள இராமயன்குளம்,
அருவித்தோட்டம் நாகராயன்குளம் மற்றும் வவுனியா பிரதேச செயலாளர் பிரிவின் கீழ்
உள்ள மடத்துவிளாங்குளம் ஆகியவற்றின் அணைக்கட்டுகளில் பாதிப்பு
ஏற்பட்டுள்ளது.

அவற்றை சீர்செய்யும் பணிகளில் அதிகாரிகளின் ஆலோசனைகளுடன்
விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version