Home இலங்கை சமூகம் தொடரும் சீரற்ற காலநிலை : கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கான முக்கிய அறிவிப்பு

தொடரும் சீரற்ற காலநிலை : கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கான முக்கிய அறிவிப்பு

0

கிளிநொச்சி – இரணைமடுக் குளத்தின் கீழ்ப்பகுதியில் மற்றும் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாவட்டத்தின் அனர்த்த நிலை தொடர்பில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள்…

இதன்போது, இரணைமடு குளத்திற்கான நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதனால், மேலதிக நீரை
வெளியேற்றுவதற்காக வான் கதவுகள் இன்று திறக்கப்படலாம். எனவே, இரணைமடுக்
குளத்தின் கீழ்ப்பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள்
மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 721
குடும்பங்களைச்சேர்ந்த 2476 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  அவர் குறிப்பிட்டார்.

இதனைவிட சிறிய குளங்கள் வான் பாய ஆரம்பித்துள்ளதாகவும் உயர்தர
பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் அர்த்த நிலைமையை எதிர்கொண்டால் 0212285330, 0760994885  என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தமக்கான உதவியினைப்பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அரசாங்க அதிபர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

NO COMMENTS

Exit mobile version