Home இலங்கை அரசியல் திருகோணமலை மக்களிடம் அருண் ஹேமசந்திரா விடுத்துள்ள முக்கிய கோரிக்கை..

திருகோணமலை மக்களிடம் அருண் ஹேமசந்திரா விடுத்துள்ள முக்கிய கோரிக்கை..

0

நாட்டில் நிலவும் அசாதாரண நிலையிலும் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு சிலர் ஒத்துழைப்பு வழங்காத நிலை காணப்படுவதாக பிரதிஅமைச்சர் அருண் ஹேமசந்திரா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

பல இடங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் திருகோணமலையில் தெய்வாதீனமாக அவ்வாறு ஒன்றும் இ்டம்பெறவில்லை.

இந்த காலப்பகுதியில் மக்கள் தங்களது ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றனர்.

ஆனால் ஒருசிலர் தங்களது சொத்துக்கள் போன்றவற்றை கருத்திற்கொண்டு ஒத்துழைப்பு வழங்காது உள்ளனர்.

எனவே மீட்புபணிகளில் ஈடுபட்டுவரும் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம், மிகவும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version