Home இலங்கை சமூகம் அடுத்து வரும் 36 மணித்தியாலங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடுத்து வரும் 36 மணித்தியாலங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிவித்தலில் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

வாகன இறக்குமதி தொடர்பான முக்கிய அறிவிப்பு

ஆபத்துக்களை குறைப்பதற்கான நடவடிக்கை

வடமத்திய மாகாணத்தில் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் வானிலை நிலவும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை கோரியுள்ளது.    

காதலியின் வீட்டுக்கு சென்ற இளைஞருக்கு நேர்ந்த கதி

தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் அறிக்கைகளை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version