Home இலங்கை சமூகம் இரணைமடுக்குள பகுதி வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இரணைமடுக்குள பகுதி வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

இன்று (28.11.2025) காலை முதல் இரணைமடு
குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளது.

மற்றும் கனகாம்பிகை
குளமும் தற்பொழுது வான் பாய்ந்த வண்ணம் உள்ளது.

அதேவேளை, கல்மடு குளம் தனது கொள்ளளவை
எட்டி வான் பாய ஆரம்பித்துள்ளது.

வான் கதவுகள் திறப்பு 

எனவே இதனைக் கருத்தில் கொண்டு குளத்தின்
நீரேந்தும் பகுதிகள் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறும் தமது
பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ளுமாறும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினர்
வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இரணைமடுவின் வான் கதவுகளால் நீர் வெளியேற்ற இயலாத நிலை உருவாகும் வேளையில் குளத்தின் வால் கட்டுப்பகுதி (வட்டக்கச்சி பக்கம்) வெட்டி விடும் நிலை உருவாகலாம் என்று முன்னதாகவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

NO COMMENTS

Exit mobile version