Home இலங்கை அரசியல் வெலிகம பிரதேச சபை உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை

வெலிகம பிரதேச சபை உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை

0

பொலிஸ் மா அதிபரின் இயலாமையின் காரணமாக எமது பிரதேச சபையின் தலைவரை இழந்து விட்டோம்.எஞ்சிய உறுப்பினர்களுக்காவது ஒரு பொலிஸ் அதிகாரியை பாதுகாப்புக்கு வழங்க வேண்டும் என வெலிகம ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் ரேஹான் ஜயவிக்கிரம கோரியுள்ளார்.

வெலிகம பிரதேச சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்று (31.10.2025) ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த கலந்துடையாடலின் பின்னர் ரேஹான் ஜயவிக்கிரம ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து பேசிய அவர்,

வெலிகம பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்திக்கு அறுதி பெரும்பான்மை இருக்கவில்லை. மீண்டும் ஒரு தலைவரை நியமிப்பதற்காக ஒருவரின் பெயரை தெரிவிக்க வேண்டும். அதற்கு ஏனைய கட்சிகளிடம் கலந்துரையாடியே முடிவு செய்ய வேண்டும்.

பெயரை தெரிவு செய்த பின்னர் ஒரு மாதத்திற்கு பின்னர் உள்ளுராட்சி சபை ஆணையாளர் வருகை தந்து வாக்கெடுப்பு நடுத்தியே தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இலேசான காரியமல்ல.

எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள்

அரசு என்ன செய்யும் என தெரியாது. இன்று நாங்கள் அனைவரும் வந்தது எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு.

மேலும் காலஞ்சென்ற தலைவர் லசந்த விக்ரமசேகரவின் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் மிதிகம அபிவித்தியை தொடர்ந்து கொண்டு செல்வதே எமது நோக்கமாகும்.

முகநூலில் எமது உறுப்பினர்களிடையே பிரச்சினை இருப்பதாக தெரிக்கப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை.

எமக்கே அதிகமான உறுப்பினர்கள் 9 பேர் உள்ளனர். அதனால் தலைவர் பதவி எமக்கே உரித்தாக வேண்டும் என தெரிவித்துள்ளோம் என கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version