Home இலங்கை குற்றம் லசந்த விக்ரமசேகர விவகாரத்தில் எழுந்துள்ள குழப்பம்..கேள்வி எழுப்பும் SJB

லசந்த விக்ரமசேகர விவகாரத்தில் எழுந்துள்ள குழப்பம்..கேள்வி எழுப்பும் SJB

0

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவுக்கு நீதிமன்றத்தில் எவ்வித குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை. அவ்வாறிருக்கையில் அவரை எவ்வாறு குற்றவாளியாக்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம அமைப்பாளர் ரேஹான் ஜயவிக்கிரம கேள்வி எழுப்பியுள்ளார்.

தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இதனை தெரிவித்தார்.

சோடிக்கப்பட்ட வழக்கு

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரதேச சபைத் தேர்தலில் லசந்த விக்ரமசேகர ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டார். இந்த பட்டியலில் நானும் இருந்தேன். எல்லோரும் தோல்வியடைந்த நிலையில் அவர் வெற்றி பெற்றார்.

பட்டியலில் முன்னிலை வகித்தார். அச்சந்தர்ப்பத்தில் அவர் பதவிப்பிரமாணம் செய்வதை தடுக்க அன்றிருந்த பொலிஸ் மா அதிபர் மற்றும் குழுவினர், அவரின் வீட்டுக்குள் ஆயுதங்கள் வைத்தனர்.

அது தான் அவரின் முதல் வழக்கு. மிதிகம பகுதியில் இப்படி ஒரு அரசியல்வாதியா என்பதை அவர்களுக்கு பொறுக்க முடியவில்லை. அவ்வாறு சோடிக்கப்பட்டதே முதல் வழக்கு. அதன் தொடர்ச்சியாகவே நான் இதை பார்க்கிறேன் என்றார்.

குழப்பம் விளைவித்தல்

வெலிகம பிரதேச சபையை நாம் கைப்பற்றிய நாள் முதல் சபையில் ஆட்சியமைக்க தேசிய மக்கள் சக்தியின் விடவில்லை. ஒரு முறை நானும் சபைக்கு சென்றிருந்த போது தேசிய மக்கள் சக்தியின் 250 பேர் வந்து குழுப்பத்தில் ஈடுபட்டனர்.

சபையின் உபகரணங்களுக்கும் சேதங்கள் விளைவித்தனர். அப்போது நான், அமைச்சர் சுனில் அந்துன்னெத்திக்கு கதைத்து இதை தீர்த்துக் கொள்ள முயற்சித்தேன். மிதிகம பிரதேசத்தில் தோற்போம் என தேசிய மக்கள் சக்தி நினைக்கவில்லை.

‘மிதிகம லசா’ தேசிய மக்கள் சக்தியை 980 வாக்குகளால் தோற்கடித்தார். இந்த பிரச்சினையில் பிரதேச சபையின் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்காக எந்த உயிரும் பலியாக்க கூடாது என்ற கொள்கையில் தான் இருந்தேன்.

ஒரு மாதத்திற்கு முன் புலனாய்வு தகவல்

வெலிகம பிரதேச சபையின் தலைவருக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாக அரச புலனாய்வு தகல்கள் தனக்கு வந்துள்ளதாக ஒரு மாதத்திற்கு முன்னர் மிதிகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி அவருக்கு தெரிவித்துள்ளார்.

வெளியில் செல்லும் போது அல்லது பிரதேச சபையில் இருக்கும் போது கூட கொலை செய்யப்படலாம் என தெரிவித்துள்ளார். அது மட்டுமல்ல எங்களுடன் இருக்கும் நண்பர்கள் இருவருக்கும் இது தெரியவந்துள்ளது.

வெலிகம பிரதேசபை தேர்தலுக்கான பெயர் பட்டியல் தாக்கல் செய்யும் போது, இவரின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்பட விடமாட்டோம் என அவரின் மனைவிக்கு நாம் வாக்குறுயளித்தோம்.

ஆனால் அதை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. சத்துர கலப்பத்தி எம்.பியும் வாக்குறுதி வழங்கியிருந்தார். லசந்த விக்ரமசேகரவை சத்துர கலப்பத்தியின் தந்தையே அரசியலுக்கு கொண்டு வந்தார்.

அவரின் வீட்டுக்கு முன்னால் புலனாய்வாளர்களின் மோட்டார் சைக்கிள்கள் சென்றதாக கூறப்பட்டது. ஆனால் விசேட பாதுகாப்பு வழங்கப்படவில்லை.
வெலிகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சட்டத்தரணி தாரக்க நாயக்காரவின் வீட்டுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது, அதுவும் கேட்டுக்கே சூடு வைக்கப்பட்டது.

அன்றிலிருந்து அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஏன் இவருக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை” என கேள்வி எழுப்பியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version