வெலிக்கடை சிறைச்சாலையின் அறை பகுதிகளில் இருந்து ஆறு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய சிறைச்சாலை அவசரகால பதிலளிப்பு குழுவினரால் விசேட சோதனை நடத்தப்பட்டுள்ளது.
கையடக்கத் தொலைபேசிகள்
இந்த நடவடிக்கையில் ஆறு கையடக்கத் தொலைபேசிகளும் மேலும் சில சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, குறித்த தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்ட அறை பகுதிகளிலேயே சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளான பல முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ, எம்.எஸ். ரஞ்சித் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கைதிகள் தங்கியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.