Home விளையாட்டு துனித் வெல்லாலகேயின் தந்தைக்காக சர்வதேச அரங்கில் மௌன அஞ்சலி

துனித் வெல்லாலகேயின் தந்தைக்காக சர்வதேச அரங்கில் மௌன அஞ்சலி

0

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகேவின் (Dunith Wellalage) தந்தைக்காக சர்வதேச அரங்கில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நேற்றைய தினம் (20) போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

தேசிய கீதம் இசைப்பதற்கு முன்னர் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில், இலங்கை அணி வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினர் கையில் கறுப்புப் பட்டியை அணிந்திருந்தனர்.

மௌன அஞ்சலி

அபுதாபியில் நடைபெற்ற ஆசிய கிண்ணத் தொடரின் போது ஆப்கானிஸ்தான் (Afghanistan) அணிக்கு எதிரான போட்டியில் துனித் வெல்லாலகேவின் தந்தை மரண செய்தியை அறிந்து அவர் இலங்கைக்கு திரும்பியிருந்தார்.

இந்தநிலையில் தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டதன் பின்னர் துனித் வெல்லாலகே மீண்டும் நேற்று முன் தினம் (19) ஐக்கிய அரபு இராச்சியத்தை நோக்கி புறப்பட்டு சென்று அணியுடன் இணைந்திருந்ததமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version