Home விளையாட்டு மேற்கிந்திய வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டாதது ஏன்..! கசிந்தது இரகசியம்

மேற்கிந்திய வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டாதது ஏன்..! கசிந்தது இரகசியம்

0

டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆர்வம் இல்லாமலேயே ரி 20 கிரிக்கெட்டில் விளையாடுவதாக மேற்கிந்திய வீரர் ரசல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மலும் தெரிவித்துள்ளதாவது,

“பணம் ஒரு முக்கிய பிரச்சனை என்று நான் நினைக்கவில்லை. உலகம் முழுவதிலும் ஏராளமான ரி20 லீக் தொடர்கள் நடைபெறுகிறது. அதனால் சில வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வமாக இல்லை என்று நினைக்கிறேன்.

  டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்றதாக உடல் இல்லை

குறிப்பாக என்னுடைய உடல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு உகந்ததாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அதே சமயம் மற்ற மேற்கிந்திய துடுப்பாட்ட வீரர்கள் விளையாடுவதை நான் ஆவலுடன் பார்ப்பேன்.குறிப்பாக அவர்கள் பவுண்டரி அடிப்பதை பார்ப்பேன்.

உங்கள் நாட்டுக்கு வெளியே ஒப்பந்தம் கிடைக்கும்போது அதை நீங்கள் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதே சமயம் அனைவரும் பெரிய இடத்தில் அசத்த விரும்புவார்கள்.

இளம் வீரர்கள் மகிழ்ச்சியுடன் விளையாடுவார்கள்

எனவே அந்தப் பெரிய வாய்ப்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் வந்தால் இளம் வீரர்கள் மகிழ்ச்சியுடன் விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன். எனவே அதற்கு பணம் மட்டும் காரணம் என்று நான் நினைக்கவில்லை” என தெரிவித்தார்.

Source: https://ibctamil.com/article/west-indies-players-not-interested-test-cricket-1723727790

NO COMMENTS

Exit mobile version