Home இலங்கை அரசியல் யாழ் மாநகர சபையில் காத்திருக்கும் அதிர்ச்சி! தமிழரசின் எதிர்காலம் NPP – EPDP யின் முடிவில்

யாழ் மாநகர சபையில் காத்திருக்கும் அதிர்ச்சி! தமிழரசின் எதிர்காலம் NPP – EPDP யின் முடிவில்

0

தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தரப்புக்களிடையே கொள்கை ரீதியான இணக்கத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தமொன்று இன்றையதினம்(2) கைச்சாத்திடப்பட்டுள்ளது.

எந்தவொரு கட்சியும் தனித்து அதிகளவான ஆசனங்களை பெறாத சூழ்நிலையில் 2 அல்லது 3 கட்சிகள் கூட்டுச்சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியவற்றிற்கான ஒப்பந்தமானது ஒரு வகையில் அரசியல் ஒழுங்குப்படுத்தல் அல்லது அரசியல் ரீதியான சிந்தாந்தம் ஒன்றோ பேசப்படுவதற்கான ஒரு தொடக்கபுள்ளியாக பார்க்கப்படுகின்றது.

தற்போது தமிழரசுக்கட்சி சார்பானவர்கள் ஒரு விமர்சனத்தையும், தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பானவர்கள் ஒரு விமர்சனத்தையும் முன்வைப்பதை காணக்கூடியதாக உள்ளது.

யாழ் மாநகர சபையின் தலைவராக மேயராக யார் தெரிவுசெய்யப்படுவார்கள், துணை மேயராக யார் தெரிவுசெய்யப்படுவார் என்ற கேள்வியுள்ள நிலையில் தமிழ் தேசிய பேரவையிடம் 12 ஆசனங்களும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியிடம் 4 ஆசனங்களும் உள்ளன.

இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி…    

NO COMMENTS

Exit mobile version