Home முக்கியச் செய்திகள் வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி தகவல் : வருகிறது புதிய Update

வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சி தகவல் : வருகிறது புதிய Update

0

பயனாளர்கள் தங்கள் கையடக்க தொலைபேசி சேமிப்பகத்தை (phone storage) திறம்பட நிர்வகிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்த வட்ஸ்அப் தயாராகி வருகிறது. 

வாட்ஸ் அப்பில் அதிகளவான விடயங்கள் பகிரப்பட்டு வருவதால், குறிப்பாக குழு சாட்களில் (group chats) உயர் தெளிவுத்திறன் (High Resolution) கொண்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தானியங்கி முறையில் பதிவிறக்கம் செய்யப்படும் போது பல பயனர்கள் குறைந்தளவான கையடக்க தொலைபேசி சேமிப்பகத்தை கொண்டிருப்பதால் சிரமப்படுகிறார்கள்.

இதற்கு தீர்வுகாணும் நோக்கில் வட்ஸ்அப் ‘பதிவிறக்க தரம்’ (‘Download Quality’) என்கின்ற அம்சத்தை உருவாக்கி வருகிறது. 

Download Quality

இதனால், பயனாளர்கள் மீடியா கோப்புகளைப் பதிவிறக்குவதற்கு முன்பு அவற்றின் தெளிவுத்திறனைத் தெரிவு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

WABetaInfo ஆல் அண்ட்ரோய்ட்களுக்கான பீட்டா பதிப்பு 2.25.18.11 இல் காணப்படும் இந்த அம்சம், பயனாளர்களுக்கு HD மற்றும் SD தரத்தை தெரிவு செய்ய அனுமதிக்கிறது.

இந்த அம்சத்தை, அமைப்புகள் (Settings ) > சேமிப்பு மற்றும் தரவு(Storage and Data ) > தானியங்கி பதிவிறக்க தரம் (Auto-Download Quality) ஊடாக அணுகலாம்.

வாட்ஸ்அப் பீட்டா

அங்கு பயனாளர்கள் தங்களுக்கு விருப்பமான மீடியா தரத்தைத் தெரிவு செய்து கொள்ள முடியும். இதன் மூலம் சேமிப்பக பயன்பாட்டின் மீது அதிக கட்டுப்பாட்டை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக தினமும் அதிக அளவிலான மீடியாவைப் பெறுபவர்களுக்கு.

கூகுல் பிளே ஸ்டோரிலிருந்து அண்ட்ரோய்ட் 2.25.18.11 க்கான அண்மைய வாட்ஸ்அப் பீட்டாவைப் பதிவிறக்கிய பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டுமே இந்த புதிய அம்சம் தற்போது அணுகக்கூடியதாக உள்ளது என WABetaInfo தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version