Home இலங்கை சமூகம் நாட்டு மக்களுக்காக பொலிஸாரால் புதிய வட்ஸ்அப் தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாட்டு மக்களுக்காக பொலிஸாரால் புதிய வட்ஸ்அப் தொலைபேசி இலக்கம் அறிமுகம்

0

பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்காக புதிய வட்ஸ்அப் தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

அத்தோடு, குறித்த தொலைபேசி இலக்கமானது 4 மணிநேரமும் சேவையில் இருக்கும் என பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்காகவே இந்த தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தொலைபேசி இலக்கம்

அதன்படி, பொதுமக்கள் அனைவரும் 071- 8598888 என்ற வட்ஸ்அப் தொலைபேசி இலக்கம் ஊடாக முறைப்பாடுகளை கூற  முடியும் என பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த வட்ஸ்அப் தொலைபேசி இலக்கம் ஊடாக காணொளிகள் அல்லது புகைப்படங்கள் தொடர்பான முறைப்பாடுகளையும் அளிக்க முடியும் என பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version