Home தொழில்நுட்பம் பயனர்களுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு

பயனர்களுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு

0

உலகின் முன்னணி குறுந்தகவல் செயலிகளில் ஒன்றான வாட்ஸ்அப் (Whatsapp) செயலியில் தகவல் பரிமாற்றம் சார்ந்து ஏராளமான புது அம்சங்கள் மற்றும் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. 

ஒருபக்கம் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், மறுபக்கம் வாட்ஸ்அப் செயலி பழைய சாதனங்களில் இயங்கும் வசதி குறைக்கப்பட்டு வருகிறது.

புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற சேவைகள்

இந்நிலையில், அன்ரொய்ட் கிட்கேட் அல்லது அதற்கும் பழைய ஓ.எஸ். கொண்ட ஸ்மார்ட் தொலைபேசிகளில் எதிர்வரும் ஜனவரி 1ஆம் திகதி முதல் வாட்ஸ்அப் செயலி இயங்காது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற சேவைகளை பயனர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் மெட்டா மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் அங்கமாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த நடவடிக்கை செயலியின் பாதுகாப்பு மற்றும் சீரான இயக்கத்தை உறுதிப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் செயலி இயங்காது

2013ம் ஆண்டு வெளியான அன்ரொய்ட் கிட்கேட் ஓஎஸ் மிகவும் பழையது என்பதால், வாட்ஸ்அப் இன் புதிய அம்சங்களை அதில் வழங்குவதில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதோடு, பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

வாட்ஸ்அப் சேவை நிறுத்தம் காரணமாக சாம்சங், எல்.ஜி. மற்றும் சோனி என பல ஸ்மார்ட் தொலைபேசிகளின் பழைய பதிப்புக்களை பயன்படுத்துவோர் பாதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

HDBlog இன் அறிக்கையின்படி, Samsung : Galaxy S3, Galaxy Note 2, Galaxy Ace 3, Galaxy S4 Mini ஸ்மார்ட் தொலைபேசிகளிலும்

Motorola : Moto G (1st Gen), Razr HD, Moto E 2014

HTC : One X, One X+, Desire 500, Desire 601

LG: Optimus G, Nexus 4, G2 Mini, L90

Sony : Xperia Z, Xperia SP, Xperia T, Xperia V போன்ற ஸ்மார்ட் தொலைபேசிகளில்  வாட்ஸ்அப் செயலி இயங்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version