Home இலங்கை சமூகம் இலங்கையின் புவிநடுக்கம் எப்போது சாத்தியம் – வெளியான பகீர் தகவல்..

இலங்கையின் புவிநடுக்கம் எப்போது சாத்தியம் – வெளியான பகீர் தகவல்..

0

இலங்கையின் புவிசார் அமைப்பை கருத்திற்கொண்டு எமக்கு புவிநடுக்கம் ஏற்படாது என்று பலர் கூறிவருகின்றனர், ஆனால் 50ற்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் அதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளன என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

வானிலைசார் நிகழ்வுகளை எதிர்வுகூறுவது போல புவிநடுக்க நிகழ்வுகளை எதிர்வுகூற முடியாது.

ஆனால் புவிநடுக்கத்திற்கான வாய்ப்புகளை கொண்டுள்ளோம் என்பது தான் முக்கியமான விடயம்.

இலங்கைக்கு அருகில் சிறிய சிறிய நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

எனவே அது பெரிதாக மாறலாம்.

அதனடிப்படையில் என்றோ ஒருநாள் புவிநடுக்கம் ஏற்படலாம் என்று மக்களின் விழிப்புணர்விற்காக குறித்த செய்தியை குறிப்பிட்டிருந்தேன்.

எனவே புவிநடுக்கம் ஏற்படாது என்று கூறுகின்றமையானது மக்களை விழிப்படைய விடாமைக்கான செயற்பாடாகும் என்று குறிப்பிட்டார்.

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி…  

NO COMMENTS

Exit mobile version