விஜய், ரம்பா, குஷ்பு உள்ளிட்ட பலர் நடித்து இருந்த படம் மின்சார கண்ணா. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1999ல் வெளிவந்த இந்த படம் தற்போது ரசிகர்களுக்கு பிடித்த படமாக இருந்து வருகிறது.
இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடித்தவர் மோனிகா காஸ்டாலினோ. அவர் விஜய் உடன் ‘உன் பேர் சொல்ல ஆசை தான்’ பாடலிலும் ஆடி இருப்பார்.
இப்போது என்ன செய்கிறார்?
மின்சார கண்ணா நடிகை மோனிகா தமிழில் பெரிய வரவேற்பை பெறாத நிலையில், அதே போல ஹிந்தி சினிமாவிலும் அவரால் ஜொலிக்க முடியவில்லை.
அதனால் மோசமான் கவர்ச்சி படங்களிலும் நடிக்க தொடங்கினார் அவர். ‘காம சுந்தரி’ என்ற படத்தில் அவர் நடித்து இருந்தார்.
அதன் பின் சின்னத்திரைக்கு சென்று பல தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் நடித்து இருக்கிறார். கபில் சர்மா காமெடி ஷோ உள்ளிட்டவற்றில் அவர் நடித்து இருக்கிறார். தற்போது சின்னத்திரையிலும் அவருக்கு வாய்ப்புகள் இல்லை.
விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பட வாய்ப்பு இல்லாமல் அடல்டு படங்கள்ல் நடிக்கும் அளவுக்கு சென்று இருப்பது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது.
Source: https://cineulagam.com/article/where-is-minsara-kanna-monica-castelino-1720459821
