Home இலங்கை சமூகம் முல்லைத்தீவில் தரமற்ற அரிசி விநியோகம்: அரசாங்க அதிபரின் உறுதி

முல்லைத்தீவில் தரமற்ற அரிசி விநியோகம்: அரசாங்க அதிபரின் உறுதி

0

முல்லைத்தீவில் (Mullaitivu) தரமற்ற அரிசி விநியோகம் செய்வதாக குற்றச்சாட்டு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவ்வாறு இடம்பெற்றிருப்பின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முல்லைத்தீவு
மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் (Umamageshwaran) தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரால் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும்
நேற்றையதினம் (25.04.2014) அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு
தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான அரிசி விநியோகம் இடம்பெற்றுவரும் நிலையில், சில இடங்களில் காலாவதியான பாவனைக்குதவாத அரிசி வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு
கிடைக்கபெற்றுள்ளது.

தரக்குறைவான அரிசி தொடர்பில் உடனடி விசாரணை: நாடாளுமன்றில் கோரிக்கை

முழுமையான தகவல்கள்

அவ்வாறு வழங்கப்பட்ட விநியோகம் தொடர்பாகவும் அதனை விநியோகித்த விநியோகஸ்தர்
தொடர்பாகவும் முழுமையான தகவல்களை வழங்குமாறு கேட்டுக்
கொள்கின்றேன்.

அத்துடன், விநியோகஸ்தர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக
பொதுமக்கள் தங்களது முறைப்பாடுகளை கிராமசேவகர் ஊடாக, பிரதேச செயலாளர் மற்றும்
மாவட்ட செயலாளரை தொடர்பு கொண்டு தெரிவிக்கும்படி அறிவுறுத்துகின்றேன்.

கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ள அமெரிக்க டொலரின் பெறுமதி

இது தொடர்பாக தங்களது பூரண அவதானத்தை செலுத்தி திட்டத்தை வெற்றியடைய
செய்யுமாறும் கேட்டுக் கொள்கின்றேன் – என்றுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலையில் மரணித்த இளம் பெண் : சர்ச்சையை தோற்றுவிக்கும் அதிர்ச்சிக் காணொளி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version