ஈழத்தமிழர்கள் தற்போது தமக்கான உரிமையைப் பெறுவதற்கு தம்மை சரிவர தகவமைத்துக் கொள்ள வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தில் உள்ளதாக யாழ். பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானப் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.
தந்தை செல்வாவின் 47ஆவது நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு இன்று (26.04.2024) ஆற்றியுள்ள நினைவுப் பேருரையிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் அணிதிரளும் நாளாக மே தினத்தை மாற்றிடுவோம் : தேசிய மக்கள் சக்தி தரப்பில் தெரிவிப்பு
நீண்டதூர பார்வை
மேலும் குறிப்பிடுகையில், “ஈழத்தமிழர்கள் தமக்கான உரிமையை பெறுவதற்கு தம்மை சரிவர தயார்படுத்த வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தில் உள்ளனர்.
வச்சிரம் போன்ற முதுகெலும்பைக் கொண்ட தலைவர்களையும், மூளைப்பலம் கொண்ட அறிஞர்களின் வருகைக்காகவும் தமிழ் மக்களின் வரலாறு செங்கம்பளம் விரித்து காத்துக்கிடக்கிறது.
இந்நிலையில் விலைபோகாத, கண்ணியமுள்ள செயல்திறன் கொண்ட நீண்ட தூர பார்வை மிக்க சிறந்த தலைவர்களை தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இதனை நிறைவேற்றவல்ல எவனோ அவனாலே தனது மக்களுக்கான விடுதலையை பெற்றுக் கொடுக்க முடியும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ். வட்டுக்கோட்டை படுகொலை சம்பவம்: சந்தேகநபர் ஒருவர் கைது
எரிபொருள் விநியோகம் தொடர்பில் புதிய நடைமுறை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |