Home உலகம் மிகவும் குறைந்த விலையில் வீடுகளை விற்பனை செய்யும் நாடு : எது தெரியுமா !

மிகவும் குறைந்த விலையில் வீடுகளை விற்பனை செய்யும் நாடு : எது தெரியுமா !

0

இத்தாலியில் நம்பமுடியாத அளவிற்கு குறைந்த விலையில் வீடுகள் விற்பனை செய்யப்பட்டு வருவாதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமீப ஆண்டுகளாக, இத்தாலியின் பல நகரங்களில் மக்களால் கைவிடப்பட்ட வீடுகளே இவ்வாறு விற்பனை செய்யப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த விலை

2019 ஆம் ஆண்டில், சம்பூகா டி சிசிலியா நகரமானது, பாழடைந்த வீடுகளை வெறும் ஒரு அமெரிக்க டொலரில் (சுமார் ரூ.85) ஏலத்தில் விற்றபோது பலரது கவனத்தைப் பெற்றது.

2021 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இந்த முயற்சி இன்னும் பிரபலம் அடைந்ததுள்ள நிலையில் நம்ப முடியாத வகையில் இரண்டு அமெரிக்கா டொலர் மற்றும் மூன்று அமெரிக்க டொலருக்கு வீடுகள் இந்நகரத்தில் ஏலம் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அழகான இத்தாலிய வாழ்க்கை முறையால் ஈர்க்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளிடையே இது வெற்றி பெற ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, இத்தாலியின் பிற நகரங்களான சிசிலியில் உள்ள முசோமெலி மற்றும் காம்பானியாவில் உள்ள சுங்கோலி போன்றவையும் இதைப் பின்பற்ற தொடங்கியுள்ளன.

இந்த முயற்சியின் முக்கிய குறிக்கோள், சிறந்த வாய்ப்புகளைத் தேடி உள்ளூர்வாசிகள் நகரங்களுக்குச் சென்றதால் ஆள் அரவமின்றி கிடக்கும் கிராமப் பகுதிகளில் மீண்டும் மக்களை குடியமர்த்துவதே என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version