Home இலங்கை சமூகம் வெள்ளை மாளிகையில் வைத்த டொனால்ட் டிரம்ப் விருந்து

வெள்ளை மாளிகையில் வைத்த டொனால்ட் டிரம்ப் விருந்து

0

வளைகுடா நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) வெள்ளை மாளிகையில் வைத்து விருந்தளித்துள்ளார்.

அதன்படி, பஹ்ரைன் நாட்டு பட்டத்து இளவரசர் சல்மான் பின் ஹமாத் அல் கலீபா மற்றும் கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி ஆகியோரை தனித்தனியாக ட்ரம்ப் சந்தித்து விருந்து அளித்தார்.

ஏற்கனவே தனது 2 ஆவது பதவிக் காலத்தின் போது சவுதி அரேபியா (Saudi Arabia), கட்டார், ஐக்கிய அரபு அமீரகம் சென்றிருந்தார்.

மத்திய கிழக்கில் அமைதி

இதன்மூலம் காஸா போரில் சிறிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டு இருந்தது.

தற்போதைய இந்தச் சந்திப்பின் போது மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் அமைதியை நிலைநாட்டுவது.

மற்றும் அமெரிக்க ஜெட் விமானங்கள், கணினி சேவையகங்கள், அலுமினிய உற்பத்தி மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.

அதேபோல், அணுசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பஹ்ரைன் இளவரசர் சல்மான் பின்னுடன் ஆலோசிக்கப்பட்டது.

NO COMMENTS

Exit mobile version