Home இலங்கை சமூகம் இலங்கை பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கை பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

சருமத்தை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான கிரீம்களால் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேசிய வைத்தியசாலையின் தோல் சிகிச்சை நிபுணர் டாக்டர் இந்திரா கஹ்விட்ட இதனை தெரிவித்துள்ளார்.

பாதிப்பு

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்”சருமத்தை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் கிரீம்களால் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

உயிர் சேதம்

24 மணி நேரத்தில், நான் கிட்டத்தட்ட 60 நோயாளிகளை பரிசோதித்தேன். அதில் 10%, வெண்மையாக்கும் கிரீமினால் ஏற்படும் பிரச்சினைகளுடன் வந்தனர்.

உதாரணத்திற்கு, உள்ளங்கை, உள்ளங்கால் கருப்பு நிறமாக மாறுகிறது. நகங்கள் பழுப்பு நிறமாக ஆரஞ்சு நிறமாக மாறும். இவை அனைத்திற்கும் பொதுவான காரணி வெள்ளையாக்கும் கிரீம்கள்.

குறுகிய கால பக்க விளைவுகள் அதிகரித்து வருகின்றன.

புற்றுநோய்க்கு முன் சிறுநீரகங்கள் மோசமடைந்து உயிர் சேதமும் ஏற்படுகிறது”.என தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version