Home சினிமா இத்தனை பிரபலங்கள் புஷ்பா 2 பட வாய்ப்பை நிராகரித்தார்களா?… யாரெல்லாம் தெரியுமா?

இத்தனை பிரபலங்கள் புஷ்பா 2 பட வாய்ப்பை நிராகரித்தார்களா?… யாரெல்லாம் தெரியுமா?

0

புஷ்பா 2

தெலுங்கு சினிமாவில் சுகுமார் அவர்களின் இயக்கத்தில் 2 பாகங்களாக வெளியாகி செம ஹிட்டடித்த படம் புஷ்பா.

2021ம் ஆண்டு அல்லு அர்ஜுன்-ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான இப்படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய ஹிட். படத்தின் கதை, அல்லு அர்ஜுன் நடிப்பு, சமந்தா ஒரு பாடலுக்கு ஆடிய நடனம் என படத்தில் இடம்பெற்ற அனைத்துமே செம மாஸ் வரவேற்பு பெற்றது.

நடிகர் விஷால் தங்கையின் கணவர் மீது மோசடி புகார்.. என்ன ஆனது?

முதல் பாக வெற்றியை தொடர்ந்து 2ம் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்தியது.

பிரபலங்கள்

புஷ்பா 2 படம் வெளியான முதல் நாள் மட்டுமே ரூ. 294 கோடி அளவுக்கு வசூல் செய்தது. 3 நாட்களில் ரூ. 500 கோடி வசூலை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்தது.

தெலுங்கு சினிமாவில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள இந்த பட கதையில் சில நடிகர்கள் நடிக்கவும் மறுத்துள்ளார்கள்.

அல்லு அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க மகேஷ் பாபுவை தான் முதலில் இயக்குனர் கேட்டுள்ளார் ஆனால் அவர் மறுத்திருக்கிறார்.

அதேபோல் ஸ்ரீவள்ளி வேடத்திற்கு சமந்தாவையும், வில்லன் கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதியையும் கேட்டுள்ளனர். இவர்களும் அந்தந்த வேடங்களில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.  

NO COMMENTS

Exit mobile version