உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை விசுவாசத்தின் சாட்சியாளர்களாக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், போப் பிரான்சிஸிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கட்டுவாபிட்டி தேவாலயத்தில் குறித்த விடயம் தொடர்பான பிரகடனம் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்திடம் கோரிக்கை
மேற்படி விடயமானது, தேசிய கத்தோலிக்க வெகுஜன தொடர்பாடல் பணிப்பாளர் பாதிரியார் ஜூட் கிரிசாந்த பெர்னாண்டடோவினால் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்த கொழும்பு மறைமாவட்டத்தின் ஊடகப் பேச்சாளர் பாதிரியார் சிரில் காமினி, தொடர்புடைய விசாரணைகளுக்கு அதிகபட்ச உதவியை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்ததாகவும் கூறியுள்ளார்.
