Home இலங்கை சமூகம் ஈழத்து வேடனால் நடு நடுங்கும் மோடி அரசு! NIAக்கு பறந்த அவசர கடிதம்

ஈழத்து வேடனால் நடு நடுங்கும் மோடி அரசு! NIAக்கு பறந்த அவசர கடிதம்

0

கேரளத்தின் ஒடுக்கப்பட்ட மக்களுடைய ஒரு முகமாக தற்போது அதிகமாக பேசப்படுகின்ற வேடன் என்கின்ற ஹிரந்தாஸ் முரளி எல்லோர் மத்தியிலும் விஸ்வரூபம் எடுக்கின்றார்.

கேரளாவைப் பொறுத்தவரையில் கம்யூனிச ஆட்சி இடம்பெறுகின்றது.அங்கு கம்யூனிசுகளும், காங்கிரசும் ஹிரந்தாஸ் முரளிக்கு ஆதரவாக செயற்படுவதுடன் பாரத ஜனதாவும், தேசிய அமைப்புக்களும் அவருக்கு எதிராகவும் செயற்படுகின்றனர்.

இந்தநிலையில் மே 18 ஆம் திகதி இடம்பெற்ற ஒரு நிகழ்விலே வேடன் பங்கு பற்றிய போது அங்கு அதிகளவான மக்கள் கலந்து கொண்ட நிலையில் சிலருக்கு காயம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதனை அடிப்படையாக வைத்து பா.க.ஜவின் முக்கிய நபர் ஒருவர் உள்துறை அமைச்சருக்கும், NIAக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், வேடன் என்கின்ற ஹிரந்தாஸ் முரளி என்பவர் சாதியத்தையும், சமயத்தையும் கையில் எடுத்து மக்களை பிளவு படுத்துகின்றார்.

எனவே, இவரை கைது செய்து NIA விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் பல முக்கிய விடயங்களை உள்ளடக்கி வருகின்றது  இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி, 

NO COMMENTS

Exit mobile version