Home இலங்கை அரசியல் மகிந்த போல செயற்பட முயற்சிக்கும் அநுர! மக்களின் ஆதரவை பெறுவதில் சவால்

மகிந்த போல செயற்பட முயற்சிக்கும் அநுர! மக்களின் ஆதரவை பெறுவதில் சவால்

0

இந்த அரசாங்கத்திற்கான மக்களின் வாக்குப்பலம் தற்காலிகமானது என பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மக்கள் ஆதரவு மிகவும் தற்காலிகமான ஒன்று என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிச்சயமற்ற வாக்கு பலம் 

இந்த நிச்சயமற்ற இந்த வாக்குபலத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ளும் நோக்கில்  அரசாங்கம் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச  செய்தது போன்றே ஜனாதிபதி அநுரகுமாரவும் பிள்ளைகளை தூக்கிக் கொஞ்சுதல், பெரியவர்களை கட்டியணைத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

  

எனினும் இவ்வாறு செய்வதினால் மட்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளினால் தற்காலிகமாக மக்களின் ஆதரவு பெற்றுக் கொள்ள முடியும் என்ற போதிலும் மக்களின் வயிறு மற்றும் அவர்களின் சட்டைப்பை என்பனவற்றை கருத்தில் கொண்டு திட்டங்கள் வகுக்கப்படாவிட்டால் மக்களின் ஆதரவினை பெறுவதில் சவால்கள் ஏற்படும்  என பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தெவ்சிறி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version