Home இலங்கை சமூகம் அதிகரித்து செல்லும் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் : தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை

அதிகரித்து செல்லும் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் : தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை

0

இம்முறை நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கடந்த ஜனாதிபதி தேர்தலை காட்டிலும் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை தொடர்பாக பகுப்பாய்வு நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடும்போது இம்முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.

2019 உடன் ஒப்பிடும்போது அதிகரிப்பு

இதன்படி 2019 ஜனாதிபதி தேர்தலில், மொத்தம் 135,452 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன, இது 0.85% மற்றும் 2024 ஜனாதிபதி தேர்தலில் பதிவான எண்ணிக்கையை விட குறைவாக இருந்தது.

2024 ஜனாதிபதி தேர்தலில் 300,300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார், இது 2.2% ஆகும்.

பகுப்பாய்வு மூலம் கண்டறிய நடவடிக்கை

எனவே வாக்குகள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை பகுப்பாய்வு மூலம் கண்டறிய எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version