பொரளை பகுதியில் உள்ள ஒரு மூத்த இராணுவ அதிகாரிக்கு சொந்தமான குடியிருப்பில் அவரது மனைவி உயிரிழந்துள்ளார்.
குறித்த இராணுவ அதிகாரியின் 47 வயதுடைய இரண்டாவது மனைவியே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், கொழும்பு மருத்துவ பரிசோதகர் அளித்த மருத்துவ அறிக்கையில், அவரது மரணம், கழுத்தை நெரித்தமையால் சம்பவித்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகள்
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இறந்த பெண்ணின் கணவரான இராணுவ உயர் அதிகாரியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
அத்துடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கொழும்பு மேலதிக நீதவானிடம் மரணத்தை முறைப்பாடளிக்க பொரளை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
