Home இலங்கை குற்றம் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

மருத்துவமனையில் இருந்து வெளியேறிய கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

0

பாணந்துறையில் கணவர் மருத்துவமனையில் இருந்தபோது, ​​கையொப்பத்தை போலியாக தயாரித்து முச்சக்கர வண்டியை விற்றதாக கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண், மொரோந்துடுவ, கோனதுவ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரது கணவர் மருத்துவமனையில், இருந்தபோது, ​​வீட்டிலிருந்து முச்சக்கர வண்டியை யாரோ திருடிச் சென்றதாக முறைப்பாடு கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போலி கையொப்பம்

அதற்கமைய, விசாரணையின் போது, ​​பண்டாரகம பகுதியில் உள்ள ஒரு வீட்டில் முச்சக்கர வண்டி நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையின் போது, ​​முறைப்பாட்டாளரின் மனைவி போலி கையொப்பத்தை பயன்படுத்தி முச்சக்கர வண்டியை விற்றிருப்பது தெரியவந்தது.

சந்தேக நபரான பெண்ணை பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version