Home இலங்கை சமூகம் முன்னாள் அமைச்சர் விஜித் விஜேமுனி வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் அமைச்சர் விஜித் விஜேமுனி வைத்தியசாலையில் அனுமதி

0

முன்னாள் அமைச்சர் விஜித் விஜேமுனி டி சொய்சா(Wjith Wijayamuni Zoysa) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிலந்தி ஒன்று கடித்த காரணத்தினால் அவசரமாக முன்னாள் அமைச்சர் விஜேமுனி டி சொய்சா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிபிலே பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டின் குளியலறையில் இந்த சிலந்தி கடித்துள்ளது.

வனவளத்துறை அமைச்சர்

சிலந்தி கடித்ததனால் அவர் திடீரென நோய் வாய்ப்பட்டதாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

விஜித் விஜேமுனி டி சொய்சா வனவளத்துறை அமைச்சராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version